சிறுதானிய உணவு திருவிழாவை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் .

சிறுதானிய உணவு திருவிழாவை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் .

சிறுதானிய உணவுகள்

பாரம்பரியமிக்க சிறுதானியத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் மனித வளத்திற்கு ஆற்றலைத் தரும் உந்து சக்தி ஆகும். இதனால்தான் நமது முன்னோர்கள் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை வாழ்க்கை முறையாக நடைமுறைப்படுத்தியதால் அவர்கள் நூறாண்டுகளுக்கும் மேலாக ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். வளர்ந்து வரும் அவசர உலகில் இன்று ஜங்க் ஃபுட் மற்றும் ரசாயனம் கலந்த கவர்ச்சிகரமான உணவுகளை உட்கொள்வதால் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கு ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்ப்பதற்காக இந்திய பாரம்பரிய உணவு வகைகளை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டது. இதில் ஒரு பகுதியாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவு திருவிழா 2023-ஐ மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று துவக்கி வைத்தார். இந்த விழாவில் சாமை, கம்பு, சோளம், கேழ்வரகு, பச்சை பயிறு வகைகள், தேன், நாட்டு சக்கரை, கருப்பட்டி போன்ற இயற்கையாக விளைந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவுகள் இன்று காட்சிப்படுத்தப்பட்டது.

Tags

Next Story