மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்
கரூரில் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மனுக்களை பெற்றார்.
மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்க கூட்டம் நடப்பது வழக்கம். நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் வாரம் வரை நேரடியாக மனுக்கள் பெறுவதை தவிர்க்கப்பட்டு, பெட்டியில் மனு செலுத்தும் நடைமுறை இருந்து வந்தது. மீண்டும் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Next Story