வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

திருட்டு 

பொள்ளாச்சி: அம்பராம்பாளையம் சுங்கம் சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் அழகர் ராஜன்.தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர் மறுநாள் பணி முடித்து வீடு திரும்பியவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பத்து பவுன் நகைகள் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தவர் இதுகுறித்து ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அழகர் ராஜன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆனைமலை போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நெருக்கமான் குடியிருப்பு கொண்ட பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகைகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story