டூவீலரை களவாடிய மர்ம நபர்

விநாயகர் கோவில் அருகே நிறுத்திய டூவீலரை களவாடிய மர்ம நபர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.
விநாயகர் கோவில் அருகே நிறுத்திய டூவீலரை களவாடிய மர்ம நபர். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் வயது 45. இவர் மே 3ம் தேதி வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சமாதேவி பூந்தோட்டம் அருகே உள்ள விநாயகர் கோவில் அருகே தனது டூவீலரை நள்ளிரவு 1: 15 மணிக்கு நிறுத்திவிட்டு தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். பிறகு 10 நிமிடம் கழித்து மீண்டும் வந்து அவரது வாகனத்தை எடுக்க முயன்ற போது, அதற்குள் அந்த வாகனத்தை யாரோ களவாடி சென்று விட்டனர். தனது வாகனம் களவாடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து வெங்கமேடு காவல் நிலையத்தில் தனது டூவீலரை யாரோ களவாடி சென்று விட்டதாக புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். களவாடப்பட்ட அந்த டூவீலரின் மதிப்பு ரூபாய் பத்தாயிரம் இருக்கும் என மதிப்பீடு செய்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, டூவீலரை களவாடிய மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Next Story