கொட்டி தீர்த்த கனமழையால் தடுமாறிய கரூர் நகர மக்கள்

கரூரில் கொட்டி தீர்த்த கனமழையால் நகர மக்கள் அவதியடைந்தனர்.

கொட்டி தீர்த்த கனமழையால் தடுமாறிய கரூர் நகர மக்கள். அதிகபட்சமாக கரூரில் 113 மில்லி மீட்டர் மழை பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் கொளுத்தி எடுத்த வெயிலால் மக்கள் வாடி வதங்கினர். தற்போது அக்னி நட்சத்திரம் நடந்து வரும் வேளையில் கடுமையான வெயிலுக்கு ஏற்ற மலை பெய்யும் என ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் மே 19, 20-ம் தேதிகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு செய்த்து. அதன் அடிப்படையில் இன்று மாலை 4:30- மணி அளவில் பெய்ய துவங்கிய மழை இன்று பொறுமையாக கன மழையாக பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது. அதன் அடிப்படையில் கரூர் நகரப் பகுதியில் அதிகபட்சமாக 113 மில்லி மீட்டரும், பரமத்தியில் 3.4 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 17.5 மில்லி மீட்டர், மாயனூரில் 16 மில்லி மீட்டர், பஞ்ச பட்டியில் 3., கடவூரில் 5-,பால விடுதியில் 3, மயிலம்பட்டியில் 32 மில்லி மீட்டர் என மொத்தம் 192.90 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதன் சராசரி அளவு 16.8 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது.

Tags

Next Story