மாடிப்படி ஏறியவர் தவறி விழுந்து பலி
பைல் படம்
மயிலாடுதுறை அருகே மாடிப்படி ஏறியபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மயிலாடுதுறை அடுத்து உள்ள ஆனந்ததாண்டபுரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ராஜன்(54) இவர் தனது குடும்பத்தாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். கடந்த 2-3-24 அன்று இரவு உணவு அருந்திவிட்டு மாடியில் தூங்குவதற்காக மாடிப்பபடி ஏறியுள்ளார், குறிப்பிட்ட தூரம் சென்றதும் மயக்கம் ஏற்பட்டு திடீரென்று படியிலிருந்து உருண்டு தரையில் விழுந்தார். இதைக்கண்ட அவரது மகன் தயாளன்(26) ஓடி வந்து பார்த்தபோது உடல் அடிபட்டும் இடுப்பு எலும்பு முறிந்தும் வலியால் துடிதுடித்தார். உடனடியாக அவரை ஆட்டோ மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தால் அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்துவிட்டார். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Next Story