குட்கா பொருட்களை பதுக்கியவர் கைது
தாந்தோணிமலை அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், தாந்தோணி மலை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல் உதவி ஆய்வாளர் தில்லைக்கரசிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ராயனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். ** அப்போது அப்பகுதியில் உள்ள அம்மன் நகரில், கரூர் அடுத்த செல்லாண்டிபாளையம், அம்மன் நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் முருகவேல் 39 என்பவர் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், கூல் லிப், விமல் பாக்கு ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவரிடமிருந்து சுமார் 2260 கிராம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனுடைய மதிப்பு ரூபாய் 2680 என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட முருகவேலை கைது செய்து,அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் .
Next Story