பட்டாசு வெடிக்க விடாமல் காவல்துறையினர் தடுத்ததால் பரபரப்பு

கோவை கரூர் சாலையில் பட்டாசு வெடிக்க விடாமல் காவல்துறையினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டாசு வெடிக்க விடாமல் காவல்துறையினர் தடுத்ததால் பரபரப்பு. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் உச்சகட்ட பிரச்சாரம் இன்று மாலை ஆறு மணி உடன் ஓய்ந்தது. அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து கரூர் - கோவை சாலையில் கே எஸ் மெஸ் எதிரே கட்சியினர் பொதுமக்களிடையே ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்துக் கொண்டு இருந்தனர். பிரச்சாரம் முடிவதற்கு பத்து நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், அதிமுக கட்சி நிர்வாகிகள் கோவை-கரூர் சாலையில், பட்டாசு வெடிக்க முனைந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், சாலையில் பட்டாசு வெடிக்க கூடாது. பிரச்சார நேரம் முடியப்போகிறது என கூறி தடுக்க முனைந்தனர். இதனால் காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் உள்ளதை கட்சியினர் காவல்துறையினருக்கு சுட்டிக்காட்டியதால், சமாதானம் அடைந்த காவல்துறையினர் பட்டாசு வெடிக்க சம்மதித்தனார். உடனே அதிமுக கட்சி நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

Tags

Next Story