மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
கரூர் மாவட்டம் தாந்தோணி மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வட்டாரத் தலைவர் மகேந்திரன் தலைமையில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார துணைத் தலைவர்கள் வினோத் குமார் விஜயலட்சுமி உள்ளிட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்வாணன் சிறப்புரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது,KKI & RRH திட்டங்களுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு KKI திட்ட பயனாளிகள் தேர்வு குறித்தான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும். KKI. & RRH திட்ட பணியாளர்களின் பட்டியலை இறுதி படுத்திட உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும். என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் நிறைவில், போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார் பொருளாளர் கமலக்கண்ணி்.