சட்டம்னா அமைச்சருக்கும் ஒன்னுதான்: போலீசார் பாராட்டு

சட்டம்னா அமைச்சருக்கும் ஒன்னுதான்:   போலீசார் பாராட்டு

செய்தியாளர் சந்திப்பை நிராகரித்த அமைச்சர்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்புமனு தாக்கல் முடிந்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பேட்டி அளிக்க தடை செய்யப்பட்டதை அமைச்சர் மதித்தது போலீசாரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு வேட்புமனுவை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரத பெற்று வந்தார். கடந்த மூன்று தினங்களாக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. 25ஆம் தேதி 5 மனுக்களும் 26 ஆம் தேதி 4 மனுக்களும் 27ஆம் தேதி 17 மனுக்கள் என ஒட்டு மொத்தமாக 26 மனுக்கள் இதுவரை தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள் மனு அளித்து முடித்தவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் பேட்டி அளிக்க முற்பட்ட பொழுது போலீசார், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தாண்டி வெளியில் வைத்துக்கொள்ள சொல்லி வந்தனர்.

அதேபோல் வேட்புமனு தாக்கல் செய்த அரசியல் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தாண்டி பேட்டியளித்தனர். இன்று காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் வேட்புமனு தாக்கலில் கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்ய நாதன், மாவட்ட ஆட்சியிடம் மனு தாக்கல் செய்து முடித்து பிறகு கீழே இறங்கி வந்து பேட்டியளிக்க ஏற்பாடு செய்தார் . நிருபர்கள் பேட்டி எடுக்கும் பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் தாண்டி வெளியில் வைத்துக்கொள்ள போலீசார் அறிவுறுத்துகின்றனர் என்று கூறினர். பரவாயில்லை மனு தாக்கல் முடிந்து விட்டது இங்கே பேட்டி அளிக்கலாம் என அமைச்சர் கூறினார்.

இது கேள்விப்பட்ட மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி மற்றும் போலீசார் ஓடி வந்து சார் ஆட்சியர் அலுவலகம் வளாகம் தாண்டி பேட்டி வைத்து கொள்ளுங்கள் என்று கேட்டதும் சிறிது வாக்குவாதத்திலா ஈடுபட்ட அமைச்சர் உடனடியாக, சரி ,பார்க்கலாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டபடியே அலுவலக வளாகம் தாண்டி காங்கிரஸ் வேட்பாளரை பேடாடியளிக்க கூறினார்.

அமைச்சர் மெய்யநாதன், போலீசாரின் அறிவுரையை கேட்டு நடந்து கொண்டது போலீசாரிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியது.. நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story