கரூரில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா

கரூரில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கரூரில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் வைகாசி மாதம் திருவிழா மே 12 ஆம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நாளான இன்று கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவிலில் இருந்து புறப்பட்ட கம்பம், கடைவீதி வழியாக சென்று, ஐந்து ரோடு அருகே உள்ள அமராவதி ஆற்றில்நீரில் விடும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொண்டு, கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இதனால் கரூர் நகரெங்கும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நகர பகுதிக்குள் வாகனங்களை கட்டுப்படுத்துவதற்காக, முக்கிய சாலைகள் அனைத்திலும் பேரிகார்டு வைத்து தடுத்து, பொதுமக்களை அமராவதி ஆறு வரை நடந்து செல்ல காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story