போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் பிசுபிசுத்தது

கரூரில் வழக்கம்போல் பஸ்கள் இயங்கியதால், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் பிசுபிசுத்தது.

கரூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் பிசுபிசுத்தது. வழக்கம்போல் பேருந்துகள் இயங்கியது. தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை போராட்டம் அறிவித்தனர். சிஐடியு சார்பில் நடத்தப்படும் இந்த போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

ஆயினும் ஐ .என்.டி.யூ. சி. தொழிற்சங்கம் இந்தப் போராட்டத்தில் ஈடுபடாது அறிவிப்பு செய்தது. போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் தமிழக அரசின் சார்பில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் இன்று காலை குறைந்த அளவு பேருந்து இயக்கப்பட்ட போதும் படிப்படியாக பயணிகளின் வரத்தை கருத்தில் கொண்டு வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் தற்போது மழை பெய்து கொண்டு இருந்த போதும், பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருவதால், பயணிகளுக்கு எவ்வித சிரமம் இன்றி அவர்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story