ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தேசம் கட்சியினர் கைது
தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி கரூர் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தேசம் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழர் தேசம் கட்சி சார்பில் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை அமல்படுத்த கோரி தமிழர் தேசம் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் பூமி அம்பலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக காவல் துறையிடம் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்திற்கு வந்த காவல்துறையினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றி சென்றனர். தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாகவும், கரூரில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன்? என தமிழர் தேசம் கட்சியினர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
Next Story