மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி கரூர் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு,தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

. தேர்தலுக்கு முன்பு திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியதை நடைமுறைப்படுத்த கோரி தமிழர் தேசம் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் பூமி அம்பலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியான மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பதை, உடனே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அருள், மாவட்ட அவைத் தலைவர் வேல்முருகன், கரூர் நகர செயலாளர் ராமு ராஜன், ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், கிருஷ்ணராயபுரம் பொறுப்பாளர் சரவணகுமார், கிழக்கு மாவட்ட தலைவர் இளங்கோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story