இளைஞர்கள் சென்ற டூவீலர் விபத்து - இளைஞர் உயிரிழப்பு
காவல்துறை விசாரணை
இளைஞர்கள் சென்ற டூவீலர் வேகமாக சென்றதால், கீழே விழுந்து விபத்து. இளைஞர் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம், கொளந்தானூர் 3-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் ஜனாத் வயது 18. இதே போல, கரூர் அடுத்த காக்காவாடி அருகே கேத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மகன் சூர்யா வயது 19. இவர்கள் இருவரும் ஏப்ரல் 10-ம் தேதி மதியம் 2 மணி அளவில், அவர்களுக்கு சொந்தமான டூவீலரில் கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட, திருமாநிலையூர் பகுதியில் இருந்து செல்லாண்டிபாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். இந்த டூவீலரை ஜனத் ஓட்டி சென்றார். சூர்யா பின்னால் அமர்ந்து சென்றார். இவர்களது வாகனம் திருமண நிலையூர் பகுதியில் உள்ள போஸ்ட் ஆபீஸ் எதிரே செல்லும்போது, வேகமாக வாகனத்தை இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜனத்துக்கு தலையில் பலத்த காயம் பட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிர் இழந்தார்.சூர்யா காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அறிந்த ஜனத்தின் தாயார் சத்யா வயது 35 என்பவர், இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில்,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஜனத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story