காவல் நிலையம் முன் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவு நீர்

காவல் நிலையம் முன் வழிந்தோடும்  பாதாள சாக்கடை கழிவு நீர்

வழிந்தோடும் கழிவுநீர் 

மயிலாடுதுறை காவல் நிலையம் முன்பு பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 15 ஆண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் செயல்பட ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து பல்வேறு கோளாறு நடைபெற்றுவருவது வாடிக்கை . சமீபத்தில் தமிழக முதல்வர் மயிலாடுதுறை வந்து புதிய மாவட்ட ஆட்சியர் அலுவளகம் திறந்து வைத்தார் .அதே நாளில் மயிலாடுதுறை மகாதானத் தெருவில் பல இடங்களில் சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்த தொகுதிமக்கள் நடமாட முடியாத அளவுக்கு இருந்தது. நகரின் பல்வேறு இடங்களில் ஆள் நுழைவு தொட்டியிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலை மற்றும் வீதி போன்றவற்றில் வழிந்தோடி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இது குறித்து நகராட்சியிட.ம் எடுத்துக் கூறினால் சரியான நடவடிக்கை இல்லை. வருடத்திற்கு கோடிக்கணக்கில் ரூபாய் பாதாள சாக்கடை பராமரிக்க செலவு செய்யப்படுகிறது. கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடி பிரச்சனை ஏற்படுகிற நேரத்தில் கழிவு நீர் பம்பிங் செய்வதை நிறுத்திவிடுகின்றனர். கடந்த ஒரு சில மாதங்களாக நகரில் பல்வேறு இடங்களில் கழிவுநீரை மழைநீர் வடிகாலில் கலக்க விடப்படுகிறது. குறிப்பாக மயிலாடுதுறை காவல் நிலைய சாலையில் கடந்த பல வருடங்களாக ஓர் ஆள் நுழைவு தொட்டியிலிருந்து சாக்கடை கழிவுநீர் மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்பட்டு மழை நீர் வடிகால் மூலம் கொண்டு போய் மயிலாடுதுறை காவிரியில் கலக்க விடப்படுகிறது.

அதே வீதியில் காவல் நிலையத்தை ஒட்டி நேற்று இரவு 11 மணி அளவில் ஆள் நுழைவுத் தொட்டியிலிருந்து கழிப்பறைநீர் வெளியேறி போக்குவரத்து காவல்துறை அலுவலகம், காவலர்கள் அங்காடி ஆலுவவகம், மயிலாடுதுறை காவல் நிலையம் ஆகியவற்றின் வழியே வழிந்தோடியது, இன்னும் சில நிமிடங்களில் மயிலாடுதுறை காவல் நிலைய வளாகத்தில் கழிவுநீர் உள்ளே போக இருந்த நேரத்தில் போலீசாரும் பொதுமக்களும் சத்தம் போட்டவுடன் கழிவுநீர் பம்பிங் செய்வதை நகராட்சி நிர்வாகம் நிறுத்திவிட்டது. மயிலாடுதுறை பாதாள சாக்கடை திட்டம் கடந்த மூன்று வருடங்களில் நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது.

மயிலாடுதுறை நகரில் இரவு நேரங்களில் சாக்கடை கழவுநீர் வழிந்து ஓடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் காவிரியில் மயிலாடுதுறை பாதாசாக்கடை கழிவு நீர் விடுவதை நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story