குடிநீர்குழாய் உடைந்துது தென்னை மர உயரத்துக்கு அருவி போல் கொட்டுகிறது

குடிநீர்குழாய் உடைந்துது  தென்னை மர உயரத்துக்கு அருவி போல் கொட்டுகிறது

வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர்; 

மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து உடைப்பெடுத்து வெளியேறி வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர்; தென்னை மரம் உயரத்துக்கு அருவி போல் கொட்டிவருகிறது
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து மயிலாடுதுறை வரை 30 கி.மீ தூரத்திற்கு சாலையோரம் குடிநீர் குழாய் பதித்து, தண்ணீர் கொண்டுவரப்பட்டு மயிலாடுதுறை நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. அடிக்கடி இந்தக்குழாய்கள் உடைவதும் அவற்றை சரிசெய்வதும் வாடிக்கையாக உள்ளது. இன்று கொள்ளிடக்கரையோரம் உள்ள முடிகண்டநல்லூர் மூன்றாவது வளைவில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தென்னை மர உயரத்திற்கு பீரிட்டு கொண்டு வெளியேறி அதில் உள்ள வயல்களுக்கு பாய்கிறது. மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம், உடனடியாக சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story