இடப்பிரச்சினை ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட பெண் தீ குளிக்க முயற்சி

இடப்பிரச்சினை ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட பெண் தீ குளிக்க முயற்சி

தீ குளிக்க முயற்சி

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கணவனுடன் மனு அளிக்க வந்த பெண் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி கனிமொழி. முருகன் முடிதிருத்த தொழில் செய்து வருகிறார். கணவன் மனைவி இருவரும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்தனர். திடீரென்று கனிமொழி கையில் மறைத்து வைத்து எடுத்து வந்த மண்எண்ணெய்யை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மேல் தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். எதிர் தரப்பினர் சின்னசின்ன பிரச்சனைகளில் தலையிட்டு ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக குற்றம்சாட்டினார். கனிமொழி அளித்த மனுவில் வடக்குதெருவை சேர்ந்த கலியபெருமாள் என்பவருக்குமிடையே இடப்பிரச்னை இருந்து வருகிறது. நீண்டநாட்களாக இருந்துவரும் இந்த இடப்பிரச்னையை காரணம் காட்டி கனிமொழியை எதிர் தரப்பினர் ஜாதியை சொல்லி திட்டி தரக்குறைவாக பேசி ஊரில் யாரும் தன்னிடம் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளக்கூடாது என்று மிரட்டுகிறார்கள், அதனால் ஊரில் யாரும் பேசுவதில்லை என்று மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இந்த பிரச்சனை தொடர்பாக விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார்.

Tags

Next Story