மயிலாடுதுறை அருகே 52 பவுன் திருட்டு
மயிலாடுதுறை அருகே பூட்டியிருந்த வீட்டை உடைத்து 52 பவுன், ரூ.2 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஜலில். வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி சஹிதாபானு இளைய மகளுடன் வசித்துவருகிறார். விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த இளைய மகளை நேற்று காலை அழைத்துச் சென்று திருச்சி கல்லூரியில் விட்டுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். வீட்டை திறந்து பார்த்தபோது பின் பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவுகள் திறக்கப்பட்டு அதிலிருந்த 52 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மயிலாடுதுறை எஸ்.பி. மீனா, டிஎஸ்பி. சஞ்சீவ்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குத்தாலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags
Next Story