நள்ளிரவில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
கரூரில் நள்ளிரவில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ஏழு பவுன் தங்க நகை மற்றும் செல்போனை திருடிய மர்மநபர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட கோதூர் சாலை, வேலுச்சாமிபுரம், கே ஏ நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 42. இவர் கரூரில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இதிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி நள்ளிரவு 12 1/4 மணி அளவில் தனது கடை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவை உடைத்து, அத்துமீறி உள்ளே சென்று மூன்று நபர்கள் களவாடும் பணியில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சடைந்தார்.
வீட்டிற்குள் சென்ற திருடர்கள் தங்கத்தோடு 7, தங்க செயின் ஒன்று, தங்க டாலர் ஒன்று, தங்க மோதிரம் ஆறு, ஆக ஐந்து பவுன் 7 கிராம் கொண்ட நகைகளை களவாடியதோடு வீட்டில் வைத்திருந்த விவோ செல்ஃபோனையும் களவாடினர். பின்னர் அப்பகுதி பொதுமக்களுடன் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரையும் சுற்றி வளைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
பிடிபட்ட மூன்று பேரில் கரூர் கோதூர் பிரிவு கே.ஏ.நகர் இரண்டாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் ஜீவா வயது 28, அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் நாகராஜன் வயது 20, கரூர் அடுத்த வெங்கமேடு, கலைஞர்சாலை, தில்லை நகர், பஸ்ட் கிராஸ்-ஐ சேர்ந்த ராஜ்குமார் மகன் கிருபா ஜோயல் வயது 25 ஆகியோர் என விசாரணையில் தெரிய வந்தது. சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஜீவா, கிருபா, நாகராஜன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல்துறையினர்.