காவிரியில் தண்ணீர் இல்லை தை அமாவாசை தர்ப்பணம் குறைவு

காவிரியில் தண்ணீர் இல்லை தை அமாவாசை தர்ப்பணம் குறைவு


மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் அளிக்க பொதுமக்கள் இன்றி காவிரி துலா கட்டம் வெறிச்சோடியது


மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் அளிக்க பொதுமக்கள் இன்றி காவிரி துலா கட்டம் வெறிச்சோடியது.

கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் தங்களது பாவச் சுமைகள் நீங்க மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி மாதத்தில் புனித நீராடி விமோசனம் பெற்றதாக ஐதீகம். இதன் காரணமாக அமாவாசை தினங்களில் துலாக்கட்ட காவிரி கரையில் அதிக அளவிலான பக்தர்கள் குவிந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கம்.

இன்று தை அமாவாசை தினத்தை ஒட்டி அதிக அளவில் பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் இன்று அதிகாலை முதல் பக்தர்களின் வரவு மிக குறைவாக உள்ளது. காவிரியின் வடக்கு கரையில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே வந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வருகின்றனர். இதனால் துலா கட்ட காவிரி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags

Next Story