திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகம்

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் 

மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் ஆலய மகா கும்பாபிஷேகத்தின் போது ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை அருகே திருஇந்தளூரில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வதுமான, பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அமைந்துள்ள பஞ்ச அரங்க ஆலயங்களுள் 5 வது ஆலயமும் சந்திரன் சாப விமோசன நிவர்த்தி பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலயம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மகா ஸம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) வெகு விமர்சையாக நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா !!என முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

Tags

Next Story