குத்தாலத்தில் 7ஆம் நூற்றாண்டு காளிகோயிலில் திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்
மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் 7ஆம் நூற்றாண்டை சேர்ந்த காளிகோயில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயகுரவர்கள் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புக்குரிய தலமான ஆனந்தவல்லி சமேத ஓம் காளீஸ்வரர் கோயில் உள்ளது. காளிதேவி குத்தாலத்தில் சிவனை வேண்டி கோயில் அமைத்து நீண்ட காலம் வழிபாடு நடத்தியதன் பலனாக, மான், மழு தரித்து, சிவ கணங்களோடு சிவபெருமான் அங்கு தோன்றி காளி தேவியோடு திரு நடனம் புரிந்ததாக வரலாறு கூறுகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா காலை நடைபெற்றது. தொடர்ந்து இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஆனந்தவல்லி சமேத ஓம் காளீஸ்வரர் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று மாங்கல்யதாரணம் செய்யப்பட்டது. திருக்கல்யாண வைபவத்தை தரிசனம் செய்தனர்.
Next Story