திருவாவடுதுறை ஆதீன 23வது குருமகா சன்னிதானம் குருபூஜை

திருவாவடுதுறை ஆதீன 23வது குருமகா சன்னிதானம் குருபூஜை

குருமகா சன்னிதானம் குருபூஜை


திருவாவடுதுறை ஆதீன 23வது குருமகா சன்னிதானம் குருபூஜை விழாவில் திரளான அடியார்கள் கலந்து கொண்டு தரிசனம்.

மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறை ஆதீன திருமடத்தின், 23வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள், 1983 முதல் 2012 வரை ஞானபீடத்தில் எழுந்தருளி அருளாட்சி செய்து வந்தார். இவர் காலத்தில், பல்வேறு கோவில் கும்பாபிஷேகங்கள் செய்து வைக்கப்பட்டதுடன்,

சைவ சமய வளர்ச்சிக்கு, பல்வேறு அரும்பணிகள் ஆற்றியுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் சிவ பரிபூரணம் அடைந்தார். சுவாமிகளின் பரிபூரணமடைந்த கார்த்திகை சதய நாளான இன்று, குருபூஜை விழா நடைபெற்றது. ஆதீன 24 ஆவது குரு மகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனையை செய்து வைத்தார். இதில் திரளான அடியார்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story