நண்பன் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்தவர்கள் கைது
கரூரில் நண்பன் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
நண்பன் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து கைவரிசை. இருவர் கைது. கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே உள்ள அருகம்பாளையம் ராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் - நித்யா தம்பதிகள். ரமேஷின் நண்பர்கள் அருகம்பாளையம் கவுண்டர் தெருவை சேர்ந்த மாணிக்கவாசகம் வயது 28 மற்றும் வெங்கமேடு பாரதிதாசன் தெருவை சேர்ந்த கார்த்திக் வயது 35. இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், வீட்டை பூட்டிவிட்டு நித்தியா கரூருக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து மாணிக்கவாசகம் மற்றும் கார்த்தி ஆகியோர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த சுமார் 31 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 6 ஆயிரத்தை களவாடி உள்ளனர். வீட்டில் இருந்த பணம், நகை களவாடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த நித்தியா, இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினர். இந்த குற்ற செயலில் ஈடுபட்ட மாணிக்கவாசகம், மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் களவாடிய நகை மற்றும் பணத்தை மீட்டனர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story