தாந்தோணி மலைப்பகுதியில் முப்பெரும் விழா

தாந்தோணி மலைப்பகுதியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கரூர் தாந்தோணி மலை ஆயிரம் வைசிய மஹாலில், கரூர் மாவட்டம் மற்றும் கரூர் நகர ஆரிய வைசிய சங்கம் சார்பில் முப்பெரும் விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த முப்பெரும் விழாவில் தமிழ்நாடு ஆயிர வைசியர் சங்க முன்னாள் துணைத் தலைவரும், கரூர் நகர ஆயிரம் வைசியர் சங்கம் முன்னாள் தலைவருமான, சுப்பிரமணியம் செட்டியார் அவர்களின் திருஉருவப்பட திறப்பு விழா, மாநில தலைவர் நெருஞ்சிப்பேட்டை அறங்காவலர் குழு மற்றும் அறங்காவலர்களுக்கும் பாராட்டு விழா,

நெறிஞ்சிப்பேட்டை திரு ஆலங்காடு அகோர தர்ம சிவாச்சாரியார் திருமடத்தின் அறங்காவலர் குழு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கு விழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்க வந்த தமிழ்நாடு ஆயிர வைசிய சங்க தலைவரும், விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தருமான ஏ எஸ் கணேசன் ழுவின் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆயிரம் வைசியர் சங்க தலைவர் ஆறுமுகம், அங்கமுத்து, செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட ஆயிர வைசியர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story