திருப்பணி : பரிமள ரெங்கநாதர் ஆலயசொர்க்கவாசல் திறப்பு இல்லை

திருப்பணி : பரிமள ரெங்கநாதர் ஆலயசொர்க்கவாசல் திறப்பு இல்லை

திருப்பணி நடைபெறும் கோவில்

மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதுமான பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெறுவதால் நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்றது. 1,500ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில்‌ வைகுண்ட ஏகாதசியை ஏகாதசி தினத்தன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில், இக்கோயிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது 14 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை சுவாமி புறப்பாடு மற்றும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறாது என்றும்,

அதிகாலையில் கோவில் திறக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், பெருமாள் பாசுரங்களை பட்டாச்சாரியார்கள் பாடியபின் பொதுமக்கள் வழக்கம்போல் மூலவர் மற்றும் உற்சவர் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story