விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கும் இடமாக இருக்க வேண்டும்- விவசாயி.
க ரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. பொதுவாக, ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுக்களுக்கு இந்த குறைதீர் கூட்டத்தில் தீர்வுகள் காணப்படுவது வழக்கம்.
பல நேரங்களில் அந்த குறைகள் குறித்து விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவார். சில பிரச்சனைகளுக்கு அதிகாரியிடம் கேட்டு பதில் அளிப்பார். அவ்வாறு பெரும்பாலான குறைகளுக்கு பதில் அளிக்கும் இடமாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் இருக்கக் கூடாது விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கும் இடமாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் அமைய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.
கரூர் மாவட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஈசநத்தம் செல்வராஜ். அப்போது, குடகனாறு குறித்து வல்லுனர் குழு அறிக்கை தயார் செய்து வருடங்கள் மூன்றாகியும் இன்னும் அளிக்கப்படாமல் உள்ளது. அந்த அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.