வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாடு
மயிலாடுதுறையில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாடு, ஓய்வூதிய அலுவலர்கள் சங்கக் கட்டடத்தில் ,மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், மாநில செயலர் பார்த்திபன், பங்கேற்று சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர். அரசு ஊழியர்களுக்கு சரண் விடுப்புத்தொகை வழங்க வேண்டும், வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான தனி பணியிடங்களை வருவாக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்து, மீண்டும் பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story