பழவேற்காட்டில் சுற்றுலா வளா்ச்சிஏஈ பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பழவேற்காட்டில் சுற்றுலா வளா்ச்சிஏஈ பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஆட்சியா் ஆய்வு

பழவேற்காட்டில் சுற்றுலா வளா்ச்சிஏஈ பணிகள்: ஆட்சியா் ஆய்வு
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் கடலோர பகுதியான பழவேற்காடு 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நகரமாகும். பழவேற்காட்டில் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதிநாராயாண பெருமாள் கோயில், சமயேஸ்வா் கோயில், புனித மகிமை மாதா ஆலயம், கலங்கரை விளக்கம், டச்சுக்காரா்களின் கல்லரைகள், முகம்மதியா் மசூதியில் உள்ள சூரிய ஒளியில் இருந்து விழும் நிழல் கடிகாரம், பறவைகள் சரணாலயம் மற்றும் 15 கி.மீ நீளமுள்ள இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய ஏரியான பழவேற்காடு ஏரி அமைந்துள்ளன. சுற்றுலாத்தலமாக விளங்கும் பழவேற்காடுக்கு வெளிமாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில் சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் பிரபுசங்கா் பழவேற்காட்டில் ஆய்வு செய்தாா். அப்போது பேசிய ஆட்சியா் சுற்றுலா துறையின் சாா்பில் வளா்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், பழவேற்காடு ஏரி பகுதியில் படகு சவாரி அமைந்தால் சிறப்பாக இருக்கும் இதன் மூலம் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவா். இதன் காரணமாக பழவேற்காடு மக்களின் வாழ்வாதாரம் உயரும் எனத் தெரிவித்தாா். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், சுற்றுலா அலுவலா்கள், சுற்றுலா வளா்ச்சி கழக பொறியாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

Tags

Next Story