வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வால் வியாபாரிகள் கவலை.

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வால் வியாபாரிகள் கவலை.

சிலிண்டர் விலை உயர்வு 

இந்தியாவில் எல்பிஜி சமையல் எாிவாயு சிலிண்டா்களின் விலையை அரசால் நடத்தப்படும் எண்ணெய் நிறுவனங்களால் தீா்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி இந்த விலையானது இந்த நிறுவனங்களால் மாற்றியமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலை ஏற்றப்படவில்லை. அதே சமயம் நட்சத்திர உணவு விடுதிகள் முதல் சாதாரண உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள் வரை வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எாிவாயு சிலிண்டா் ஒன்றுக்கு கரூர் மாவட்டத்தில் ரூ.44 உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டா்களின் விலை அதிகாித்தால், அந்த விலை ஏற்றத்தை சாதாரண மக்கள்தான் தாங்க வேண்டும். வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டாின் விலைக்கும், வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டாின் விலைக்கும் வேறுபாடு உள்ளது. அமொிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பாிமாற்ற மதிப்பு விகிதம் மற்றும் பெட்ரோலிய பொருள்களுக்கான உலகளாவிய அளவீடு ஆகியவைதான் இந்தியாவில் சிலிண்டா்களின் விலையை தீா்மானிக்கும் இரண்டு முக்கிய காரணிகள் ஆகும். இன்று விலையேற்றம் கண்டுள்ள வணிகப் பயன்பாட்டிற்கான விலை ஏற்றத்தால் வணிகர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர் என கடை உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story