மயிலாடுதுறையில் எல்லை தாண்டிதால் தாக்கப்பட்ட திருநங்கை

மயிலாடுதுறையில் எல்லை தாண்டிதால் தாக்கப்பட்ட திருநங்கை

தாக்கப்பட்ட திருநங்கை

தஞ்சையிலிருந்து வந்த திருநங்கை மயிலாடுதுறை பகுதியில் சக தோழிகளால் தாக்கப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநங்கைகள் தங்களது குடும்ப செலவுக்காக கடைவீதியில் வாரத்தில் ஒரு நாள் வணிகர்களிடமும் பொதுமக்களிடமும் வசூல் செய்து வருவது வாடிக்கை. ஒரு சில திருநங்கைகள் வெளியூரிலிருந்து மயிலாடுதுறைக்கு வந்து வசூல் செய்தால் இங்கு உள்ள திருநங்கைகள் அவர்களை சுற்றி வளைத்து அடிப்பதும் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் தஞ்சையை சேர்ந்த திருநங்கை ஒருவர் சென்றதைப் பார்த்த மூன்று திருநங்கைகள் ஒன்று சேர்ந்து வெளியூர் திருநங்கையை அடித்து விரட்டினர்.

அடிபட்ட திருநங்கை உயிருக்கு பயந்து பேருந்து நிலைய வாயில் உள்ள புறக்காவல் அறையில் நுழைந்து தப்பித்தார். அங்கிருந்த போலீசார் திருநங்கைகளை விரட்டியடித்தனர்.

தஞ்சம் அடைந்த திருநங்கையை மறுபுறம் ஓடச் சொல்லி விரட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .

Tags

Next Story