மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு பயணம்

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு பயணம்

வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு 

மயிலாடுதுறை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேடு, இவிஎம் இயந்திரம் ஆகியவை அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை தொகுதியானது மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளடக்கியது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட், இவிஎம் இயந்திரங்கள் சித்தர்க்காடு நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சோதனை செய்யப்பட்டு இன்று அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்றது.

மயிலாடுதுறை சட்டசபை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தர்க்காடு கிடங்கில் இருந்து 319 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 319விவிபேட், 345 இவிஎம் இயந்திரங்கள் வாகனங்களில் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு துப்பாகி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு கொண்டு வரப்பட்டது.

பணியாளர்கள் விவிபேடு இயந்திரத்தை கொண்டு செல்லும்போது சில விவிபேட் இயந்திரங்கள் சரியாக மூட முடியாமல் திறந்து கொண்டது. லாக் சரியில்லாமல் திறந்து கொள்வதாகவும், தேர்தலுக்குமுன் சோதனை செய்யப்பட்டு வாக்குசாவடி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வி யுரேகா மேற்பார்வையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம் பூட்டி சீல்வைக்கப்பட்டது. இதேபோல் பூம்புகார், சீர்காழி சட்டசபை தொகுதிகளுக்கான இயந்திரங்களும் அனுப்பிவைக்கப்பட்டது.

Tags

Next Story