கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடிய த.வெ.க தொண்டர்கள் !

கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடிய த.வெ.க தொண்டர்கள் !

த.வெ.க தொண்டர்கள்

கரூரில்,கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழாவை கொண்டாடிய த.வெ.க தொண்டர்கள்.
கரூரில்,கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடிய த.வெ.க தொண்டர்கள். தமிழக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், கர்மவீரர் காமராஜர் புகழ் ஓங்குக! த.வெ.க தலைவர் தளபதி விஜய் புகழ் ஓங்குக! என்று வாழ்த்தி கோஷமிட்டனர்.

Tags

Next Story