பெரியாண்டாங்கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய இருவர் கைது

பெரியாண்டாங்கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய இருவர் கைது

காவல் நிலையம்

பெரியாண்டாங்கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெரியாண்டாங்கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மே 10-ம் தேதி மாலை 4 மணியளவில் பெரியாண்டாங் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள அமராவதி ஆற்று படுகையில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட பெரியாண்டாங் கோவில், பெரியார் நகரை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சின்ன ஆண்டாகோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 200யும் பறிமுதல் செய்தனர்.

இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story