கரூரில் வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் நுழைந்து மிரட்டல் விடுத்த இருவர் கைது

கரூரில் வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் நுழைந்து மிரட்டல் விடுத்த இருவர் கைது

கொலை மிரட்டல்

வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கி மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திண்ணப்பா கார்னர், ஓம்சக்தி காம்ப்ளக்ஸில் அலுவலகம் அமைத்து செயல்பட்டு வருகிறார் வழக்கறிஞர் பாபு வயது 38. கரூர் மாவட்டம், புலியூர், டீச்சர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் மகன் விஜயகுமார் வயது 32.

இவர் தற்போது கோவையில் உள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். விஜயகுமார் நண்பர், சென்னை,அம்பத்தூர், கிரவுண்ட் லைன், உதசூரியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் வயது 31. இவர் தற்போது விஜயகுமாருடன் கோவையில் உள்ள பாப்பநாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். விஜயகுமார் தொடர்பான ஒரு வழக்கில் வழக்கறிஞர் பாபு ஆஜரானார்.

இதற்காக வழக்கறிஞர் பணிக்கான கட்டணத்தை ஏப்ரல் 3-ம் தேதி விஜயகுமாரிடம் கேட்டுள்ளார். அப்போது விஜயகுமார் தனது நண்பர் தினேஷ் குமார் மூலம் ஜி பே செய்வதாக கூறியுள்ளார். ஆனால், சொன்னபடி அவர்கள் ஜிபே மூலம் பணம் செலுத்தவில்லை. இதனால், வழக்கறிஞர் பாபு மீண்டும் விஜயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு உள்ளார். அப்போது தன்னிடம் பணம் இல்லை. நாளைக்கு என்னை கூப்பிடுங்கள் என்ன விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏப்ரல் நான்காம் தேதி செல்போனில் கூப்பிட்டு பணம் கேட்டுள்ளார். அப்போது பணம் தராத தினேஷ்குமார், அலைபேசி தொடர்பை துண்டித்துள்ளார். மேலும், ஏப்ரல் 7-ம் தேதி காலை 9 மணி அளவில், வழக்கறிஞர் பாபு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, விஜயகுமாரும், தினேஷ்குமாரும் தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கி, மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் பாபு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், விஜயகுமார், தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story