சந்தேகத்தினால் பெண்ணை கத்தியால் குத்திய இருவர் கைது.

கரூர் மாநகராட்சி காலனியில் சந்தேகத்தினால் பெண்ணை கத்தியால் குத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்தினால் பெண்ணை கத்தியால் குத்திய இருவர் கைது. கரூர் மாநகராட்சி காலனியில் வசித்து வருபவர் சண்முகம் மனைவி மணிமேகலை வயது 40. இவர் கரூர் மாநகராட்சியில் சுகாதாரப் பணியாளராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் இவரது சகோதரி, ராமசாமி மனைவி கௌரி வயது 38. இதே பகுதியில் வசித்து வருபவர்கள் சுப்பன் மகன் விஜயபாஸ்கர் வயது 38.

இவரது சகோதரர் பாலகிருஷ்ணன் வயது 31. ஏப்ரல் 1ம் தேதி அன்று, விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு, பொது பாதையில் அமைக்கப்பட்டு இருந்த பத்துக்கு பத்து அளவுள்ள செட்டை மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கருதி அகற்றி விட்டது. இந்த விஷயத்தில், மணிமேகலை அளித்த தகவலின் பேரில்தான், மாநகராட்சி இந்த நடவடிக்கை எடுத்தது என சந்தேகம் அடைந்த விஜயபாஸ்கர் ஏப்ரல் 1ம் தேதி இரவு பத்தே கால் மணி அளவில், மணிமேகலை வீட்டுக்கு வந்த விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரன் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் மணிமேகலையை தகாத வார்த்தை பேசி தாங்கள் கொண்டு வந்திருந்த கத்தியால் குத்தி மிரட்டல் விடுத்தனர்.

இந்த சம்பவத்தில் மணிமேகலைக்கும் அவரது சகோதரி கௌரி ஆகிய இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மணிமேகலை அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் பெண்ணை கத்தியால் குத்தி காயப்படுத்திய, விஜயபாஸ்கர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story