அருகம்பாளையம் அருகே இருவர் கைது
கோப்பு படம்
கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பணம் வைத்த சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தர்மலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நேற்று மதியம் மூன்று மணி அளவில், அருகில் உள்ள அருகம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது அப்பகுதியில் உள்ள மயானம் அருகே பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட வெங்கமேடு, என் எஸ் கே நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு,கரூர், நீலிமேடு, கோட்டையண்ணன் தெருவை சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் சூதாட பயன்படுத்திய சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 200 ஐயும் பறிமுதல் செய்தனர். மேலும், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.