ஊட்டச்சத்து இரு வாரத் திருவிழா

ஊட்டச்சத்து இரு வாரத் திருவிழா

ஊட்டச்சத்து திருவிழா 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற போஷன் பக்வாடா-2024 ஊட்டச்சத்து இருவார திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டப் பணிகள் சார்பில் போஷன் பக்வாடா-2024 ஊட்டச்சத்து இருவார திருவிழா நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்து, குழந்தைகள் மையங்களில் பயின்ற முன்பருவ குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் திருக்குறள்களை சொல்லி பாடல் பாடி குழந்தைகள் அசத்தினர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில் சிறுதானிய உணவுகளை கலந்து சாப்பிட்டு வந்த நிலைமாறி 3 வேலையும் அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் உடல்நலத்திற்கு கேடு ஏற்படும். இதனால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். உணவு பழக்கவழக்கங்களை சரியாக கடைபிடித்தால் ஆரோக்கியமாக நீண்டகாலம் நோயின்றி வாழ்ந்து நல்ல குழந்தைகளை பெற்று நல்ல குழந்தைகளை வளர்த்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

முன்னதாக அங்கன்வாடி ஊழியர்கள் காட்சிபடுத்தியிருந்த ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய உணவுகளை ருசித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டார். கம்பு புட்டு, காரஅடை, சோன உருண்டை, மொச்சை குழம்பு, திணை லட்டு, வாதநாரயணகீரைஅடை உள்ளிட்ட பல்வேறு வகையான சிறுதானிய உணவு வகைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி உண்டு மகிழ்ந்தனர். .

Tags

Next Story