சைக்கிள் மீது டூவீலர் மோதி விபத்து - வட மாநில பெண் படுகாயம்

சைக்கிள் மீது டூவீலர் மோதி விபத்து - வட மாநில பெண் படுகாயம்

காவல் நிலையம் 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா , முள்ளிகாளி பகுதியைச் சேர்ந்தவர் பிரிதாஸ். இவரது மனைவி மாதவி (45) இவர் தற்போது கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொழில்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். நவம்பர் 10 ஆம் தேதி காலை 8:30- மணி அளவில் திருச்சி- கரூர் சாலையில் இவரது தோழியருடன் சைக்கிளில் சென்றுள்ளார். இவரது தோழி சைக்கிளை ஓட்ட, இவர் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். இவரது வாகனம் மூலகாட்டனுர் பகுதியில் உள்ள கோபி கடப்பாக்கல் கடை அருகே வந்த போது, கரூர், காந்திகிராமம், ஈபி காலனி, பாரதியார் தெரு, மூணாவது கிராஸ் பகுதி சேர்ந்த தருன்கார்த்திக் (18) என்ற இளைஞர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் மாதவி அமர்ந்து சென்ற சைக்கிளின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாதவிக்கு வலது கை, முன் நெற்றி, இடது கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, மாதவி அளித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story