டூவீலர் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து

டூவீலர் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து

காவல்துறை விசாரணை


டூவீலர் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து. சிறுவன் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் எல்லைக்குட்பட்ட, வாங்கபாளையம் அருகில் உள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி ஹேமாபவித்ரா. இவரது மகன் தர்ஷன் வயது 14. இவர்கள் இருவரும் ஏப்ரல் 13ஆம் தேதி காலை 6:15 மணியளவில் டூவீலரில், கரூர் டு சேலம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் வெங்கமேடு பகுதியில் செயல்படும் ஸ்கோடா கார் ஷோரூம் அருகே சென்றபோது, எதிர் திசையில்,கரூர், தெற்கு ராம் நகர், சாய்ராம் கார்டன் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் வயது 47 என்பவர், வேகமாக ஓட்டி வந்த கார், ஹேமாபவித்ரா ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த தர்சனுக்கு வலது கால் மற்றும் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள கே ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹேமாபவித்ரா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரவிசங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Next Story