சிக்காத சிறுத்தை மலத்தைக் கைப்பற்றி சோதனைக்கு அனுப்பிய அதிகாரிகள்
அதிகாரிகள் ஆய்வு
மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி செம்மங்குளம் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்ட நிலையில் கடந்த மூன்றாம் தேதி சிறுத்தையின் புகைப்படம் சென்சார் கேமராவில் பதிவாகியது. இதை நேற்று மாவட்ட வனத்துறையினர் வெளியிட்டனர். கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று இரவு ஆரோக்கியநாதபுரம், மயிலாடுதுறை ரயில்வே நிலையம், அசிக்காடு, மறையூர், கோவங்குடி, ஊர்க்குடி ஆகிய ஆறு இடங்களில் ஏழு கூண்டுகள் வைக்கப்பட்டு சிறுத்தை பிடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டது.
எந்த கூண்டிலும் சிறுத்தை சிக்காத நிலையில் மயிலாடுதுறை ரயில்வே நிலையம் அருகே ரயில்வே தண்டவாளம் பாலம் கீழே சிறுத்தையின் தடங்கல் இருப்பதாக தகவல் வந்ததையடுத்து மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் மற்றும் நீலகிரி பொம்மன்,
களான் குழு மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதியில் சிறுத்தையின் கால்தடங்கள் எதுவும் தெரியாத நிலையில் காவிரி ஆற்றில் முடியுடன் கூடிய மலத்தை கைப்பற்றியுள்ளனர்.
இந்த மலம் சிறுத்தை மலம் போன்று இருப்பதால் அதை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்று உள்ளனர். தொடர்ந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.