பாதாள சாக்கடை கழிவறை நீர் காவேரி ஆற்றில் கலப்பதில் சிக்கல்

பாதாள சாக்கடை கழிவறை நீர் காவேரி ஆற்றில் கலப்பதில் சிக்கல்

பாதாள சாக்கடை

மயிலாடுதுறை காவல் நிலைய சாலையில் 20 நாட்களாக வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர் பாதாள சாக்கடை பராமரிப்பாளர்கள் மெத்தன போக்குடன் செயல்படுகின்றனர்.

. மயிலாடுதுறையில் 7 ஆண்டுகளாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பாதாள சாக்கடை கழிவு நீரால் பொதுமக்கள் தொற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்து பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது என்று கண்டனம் தெரிவித்து பாதாள சாக்கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாதாளசாக்கடை திட்டம் அமைப்பதற்கு பரிந்துரைப்பதாக தெரிவித்த திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை குழாய்களில் மண் அடைபட்டுள்ளதால் பாதாள சாக்கடை நீரேற்று மையங்களில் பம்பிங் செய்யும்போது பாதாள சாக்கடை கழிவுநீர் பல்வேறு வீதிகளில் ஆழ்நுழைவுத் தொட்டி வழியாக சாலைகளில் வழிந்தோடி மழை நீர் வடிகால் வழியாக ஆறு வாய்க்கால்களில் கலந்து வருவது தொடர்கதையாக உள்ளது. மயிலாடுதுறை காவல் நிலையம் சாலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதாள சாக்கடை கழிவுநீர் மழை நீர் வடிகாலில் திருப்பி விடப்பட்டு காவிரி ஆற்றில் கலந்து வருகிறது கடந்த 20 தினங்களாக காவிரி ஆற்றுக்குச் செல்லும் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேறி காவல் நிலைய சாலையில் சுகாதார சீர்கெட்டை ஏற்படுத்தி உள்ளது. புனித நதியான காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் இல்லை... பாதாள சாக்கடை நீர் அதில் திருப்பி விடப்பட்டுள்ளது . காவிரியில் தண்ணீர் வந்தால் மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவு நீர் அதில் கலந்து பக்தர்களுக்கு புனித நீர் ஆகிவிடும்.

Tags

Next Story