மாயூரநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம்

மாயூரநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் சுவாமி  தரிசனம்

மத்திய அமைச்சர் சாமி தரிசனம் 

மாயூரநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் சுவாமி தரிசனம் ,பாரத பிரதமர் மோடி உள்ளிட்டோர் பெயர்களில் அர்ச்சனை செய்து வழிபாடு
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில், சிவபெருமானின் சாபம் பெற்ற பார்வதி தேவியார் மயில் உரு கொண்டு, சிவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற தலமாக விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில் சுவாமி அம்பாளை வழிபட்டால், பாவ விமோசனம் கிட்டும் என்பது ஐதீகம். இக்கோவிலுக்கு நேற்று வந்த துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய அமைச்சரான சர்பானந்த சோனாவாலுக்கு கோவில் நிர்வாகம் சார்பிலும் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆர்டிஓ. யுரேகா மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற மத்திய அமைச்சர் சுவாமி , அம்பாள் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர் பிரதமர் மோடி பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து அவருடன் பாஜக மாநில பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம், மற்றும் தங்க வரதராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story