வைகறை டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் வாராந்திர தேர்வு - ஏராளமானோர் பங்கேற்பு
வைகறை டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் வாராந்திர தேர்வு
பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்த இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு அரசு வேலை என்பது இலக்காகவும், அவர்களது வாழ்வியல் கணக்காகவும் உள்ளது. இதற்கு அரசு நடத்தும் டிஎன்பிசி எனப்படும் பொது தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இதற்காக,கரூர் அடுத்த தாந்தோணிமலை பகுதியில் வைகரை TNPC பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் பத்தாம் வகுப்பு மற்றும் இளநிலை படிப்பு முடித்தவர்கள் அரசு பணிக்காக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பயிற்சி மேற்கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு வாரந்தோறும் தேர்வு நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று தாந்தோணி மலை பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் பயிற்சி வாராந்திர தேர்வு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் விஜயபாரதி மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த தேர்வில் திருச்சி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட 7- மாவட்டங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் வெற்றி பெறும் தேர்வவர்களுக்கு குரூப் 2 முதல் நிலை தேர்வு எழுத பயிற்சி வழங்கப்படும். பொதுவாக குரூப் 4, குரூப் 7பி, குரூப் 8- போன்ற தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு வேலை உறுதியாக கிடைக்கும். எனவே தேர்வில் வெற்றி பெறும் முனைப்போடு ஒவ்வொருவரும் கவனத்துடன் வாராந்திர தேர்வை எதிர்கொண்டனர்.