தற்கொலை செய்த கிராம நிர்வாக அலுவலர் எழுதி வைத்த கடிதத்தால் பரபரப்பு
பொள்ளாச்சி அடுத்துள்ள கூளநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி 35 வயது .இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் பொள்ளாச்சி பகுதியில் உள்ள அவரது வீட்டில் சென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்து ஷெல்பாஸ் மருந்தை உட்கொண்டு தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்புசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்பு இத்தகவல் அறிந்து வந்த கோமங்கலம் காவல் நிலைய போலீசார் கருப்பு சாமியின் உறவினர்களிடையே நடத்திய விசாரணையில் இவருக்கு வயிற்று வலியும் அடிக்கடி மூச்சு திணறலும் ஏற்பட்டு வருவதாலும் மேலும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் இருந்து வந்ததாலும் இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என போலீசாரிடம் கூறியுள்ளனர். கோமங்கலம் காவல் நிலையம் போலீஸசாரும் உறவினர்களின் வாக்குமூலத்தை நம்பி தற்கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்ற போது அவரது வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் பொழுது தனது தாயிடம் கருப்புசாமி ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார்.
அந்த கடிதத்தை இன்று அவர்கள் எடுத்துப் பார்த்தபோது திடுக்கிடும் தகவகள் அவர்களுக்கு தெரிந்துள்ளது. கிராம நிர்வாகி அலுவலர் கருப்புசாமி தனது மரண சாசன வாக்குமூலத்தை தனது கைப்பட எழுதியுள்ளது எனது இறப்புக்குக் காரணமாக இருந்த மக்கள் மித்திரன் தனியார் பத்திரிக்கை ஆசிரியர் மணியன் மீதும் எனக்கு அலுவலகத்தில் அடிக்கடி பல இன்னல்களைத் தந்து மக்கள் பணிகளை என்ன செய்ய விடாமல் தடுத்து வந்த கிராம நிர்வாக அலுவலர் சித்ராவின் மீதும் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். எனது அருமை உடன்பிறந்த நண்பர்கள் அம்மா அப்பா மற்றும் பெரிதும் நேசிக்கும் எனது புதுக்கோட்டை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் நண்பர்களே நான் மிகவும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டு செல்கிறேன் எனது மனம் மிகவும் வேதனையுடன் தமிழருக்கு மானம்தான் பெரிது என்ற நிலையுடன் உயிரை விடுகிறேன் என்று கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருப்புசாமியின் உறவினர்கள் உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் அவர் எழுதி வைத்த கடிதத்தையும் புகார் மனுவையும் அளித்துள்ளனர். தற்போது கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.