எம்எஸ் சுவாமிநாதன் குழு அறிக்கையை நிறைவேற்றக் கோரி வாகன பேரணி

எம்எஸ் சுவாமிநாதன் குழு அறிக்கையை நிறைவேற்றக் கோரி வாகன பேரணி

வாகன பேரணியில் ஈடுபட்ட சங்கத்தினர் 

இந்தியாவில் விவசாயத்தையும், விவசாயிகள், தொழிலாளர்களையும் பாதுகாக்க எம் எஸ் சுவாமிநாதன் குழு அறிக்கை நிறைவேற்ற கோரி விவசாயிகள் வாகன பேரணியில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்கத்தின் சார்பில் இந்தியாவை, விவசாயத்தை விவசாயிகளை தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி விவசாயிகளும் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய கார் ஆட்டோ இருசக்கர வாகன டிராக்டர் பேரணி நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற பேரணியை பேரணியை சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் மதியழகன் துவங்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், ஆட்டோ, டாடாஏசி போன்ற நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என 200க்கம் மேற்பட்ட வாகனங்களில் காவேரி நகர் மேம்பாலத்தில் இருந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

இதில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் செலவுடன் 50 சதவிகிதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதாரவிலையைநிர்ணயம் செய்ய வேண்டும், சிறு,குறு, நடுத்தர விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்,

தொழிலாளர்கள் போராடி பெற்ற 42 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக குறைத்து தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதை கைவிட வேண்டும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்ததி சம்பளத்தை 600 ரூபாயராக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் விவசாயிகள் முன்னேற்ற சங்கம், நலமா அறக்கட்டளை,

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தை சார்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இதில் டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் அன்பழகன் தமிழிலும் ஹிந்தியிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

Tags

Next Story