வெங்கமேடு கருப்பண்ணசாமி கோவில் திருவிழா

வெங்கமேடு கருப்பண்ணசாமி கோவிலில் நடந்த கிடா வெட்டி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

வெங்கமேடு கருப்பண்ணசாமி கோவிலில் கிடா வெட்டி திருவிழா.பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு. கரூர் அடுத்த வெங்கமேடு நேரு நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் பகுதி மக்கள் இணைந்து நடத்திய ஸ்ரீ ராஜகணபதி, ஸ்ரீ கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ துர்க்கை ஆகிய தெய்வங்கள் எழுந்தருளியுள்ள கோவிலில், 35 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 17ஆம் தேதி துவங்கிய தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருவிழாவின் இறுதி நாளான இன்று காலையில் கிடாவெட்டு நடைபெற்று, மதியம் 12 மணியளவில் அடசல் பூஜையும் நடைபெற்றது.

இந்த பூஜையில் கருப்பணசாமிக்கு பிடித்த பொருட்களை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கறி சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags

Next Story