அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள்

அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள்
போட்டி தேர்வு பயிற்சி 
பொள்ளாச்சியில் வார இறுதியில் அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களின் செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அரசு துறையில் உள்ள பல்வேறு காலியிடங்களில் பணியமர்தப்படுவர்.

இந்த தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது அப்படி 2019ஆம் ஆண்டில் குரூப் 4ல் தேர்வான ரவிகுமார், தனபால், கார்த்திக் மற்றும் குமார் ஆகிய நான்கு பேரும் பொள்ளாச்சி நகரம் மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நால்வரும் கிராமப்புற இளைஞர்களுக்கு இலவசமாக அரசு பணியாளர் தேர்வுக்கான பயிற்சிகளை வார இறுதி நாட்களில் வழங்கி வருகின்றனர்.

இவர்கள் கடந்த 2019ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 1000.பேருக்கு பயிற்சி அளித்துள்ளனர் இதில் பலர் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலைகளில் உள்ளனர். ஆரம்பத்தில் தங்களது வீடுகளில் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்க கட்டிடத்தில் இலவச பயிற்சியை துவங்கிய இவர்கள் கொரோனா பேரிடர் காலத்தில் இணையதளம் மூலம் பயிற்சி அளித்தனர். பின்னர் போதிய இடவசதி இல்லாமல் தங்களது இல்லத்திலும் பல கிராமங்களில் உள்ள பொது இடங்களிலும் பயிற்சி அளித்து வந்தனர். தற்போது பொள்ளாச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் தங்களது சொந்த செலவில் மேற்கூரை அமைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

இவர்களிடம் பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்து அரசு பணியில் உள்ளவர்கள் கூறுகையில் அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு பல்வேறு இடங்களில் தனியார் பயிற்சி மையங்கள் உள்ளது பலர் அதை நாடி செல்கிறார்கள்.

அனுபவ பாடம் இலவசமாக கிடைக்கும் இதுபோன்ற இடங்களில் யாரும் சேர்வதில்லை என வேதனை தெரிவித்தனர்.

பயிற்சியாளர்கள் கூறுகையில் அரசு தேர்வுகள் கடினம் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உண்டு அதை எளிதில் கற்றுக்கொண்டு எப்படி தேர்ச்சி பெறலாம் என்ற அடிப்படையை நாங்கள் அவர்களுக்கு சொல்லி தருகிறோம் வாரம் ஒருமுறை தேர்வு வைத்து அவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

Tags

Next Story