பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை

பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை

கருப்புசாமி 

பொள்ளாச்சி அருகே பூச்சி கொல்லி மருந்து சாப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அடுத்துள்ள கூளநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கருப்புசாமி 35 வயது. இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பெரியகோட்டை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அவருடைய சொந்த ஊரான பொள்ளாச்சி அருகே உள்ள கூள நாயக்கன்பட்டியில் உள்ள அவர் வீட்டில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்து செல்பாஸ் மாத்திரையை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து கோமங்கலம் கவ்வால் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story